சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒளிராத கோபுர மின்விளக்கு: நகரப்பகுதி மக்கள் தவிப்பு

Added : நவ 27, 2019
Advertisement

வால்பாறை : வால்பாறை நகரில், இரவு நேரத்தில் எரியாத மின் விளக்குகளால், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வால்பாறை நகராட்சி சார்பில், நகரில் ஐந்து இடங்களிலும், முடீஸ் பஜாரில் ஒரு இடத்திலும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.இது தவிர, வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் எஸ்டேட் பகுதியிலும் அதிக அளவில் தெருவிளக்கும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த பத்து நாட்களாக இரவு நேரத்தில் எரிவதில்லை.

இரவில், சிறுத்தை நடமாடும் பகுதியில் மின்விளக்கு எரியாததால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை நகராட்சியில் மின் பராமரிக்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கபட்டுள்ளது. இதனால், அடிக்கடி இந்த பிரச்னை எற்படுகிறது.ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் பழுதடைந்த தெருவிளக்கு ஓரிரு நாளில் சரி செய்யப்படும். அதே போல் எஸ்டேட் பகுதியில் பழுதடைந்த தெருவிளக்குகளும் உடனடியாக சரி செய்யப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X