சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெறி நாய் கடித்து 19 பேர் படுகாயம்

Added : நவ 27, 2019
Advertisement

கம்மாபுரம்: கம்மாபுரம் அருகே வெறிநாய் கடித்ததில் 2 பள்ளி மாணவர்கள் உட்பட 19 பேர் படுகாயமடைந்தனர்.கம்மாபுரம் அடுத்த தே.பவழங்குடி கிராமத்தில் சுற்றித்திரிந்த வெறி நாய் கடித்ததில், கடந்த இரண்டு நாட்களில் அதேப் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி மகன் அருள்குமரன், 9; தங்கராசு மனைவி கொடிபவுனு,55, பழனிசாமி மகன் நிவாஸ்குமார், 12, ராமசாமி மகன் ஆறுமுகம்,65, தேவராஜன்,60, ரவிச்சந்திரன், 40, தர்மலிங்கம், 50, சுந்தரபாண்டியன்,32, இளம்பிறை, 13, உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.அவர்களுக்கு, கார்மாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆறுமுகம், 65, என்பவர் மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும், வெறி நாய் கடித்ததில், அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் படுகாயமடைந்தன. அவற்றிக்கு, கால்நடை மருந்தகத்தில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இச்சம்பவத்தால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X