கிள்ளை: கிள்ளை அருகே அரசு அனுமதியின்றி, வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். கோவிலாம்பூண்டி கிராமத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த அதேப் பகுதியை சேர்ந்த முகமது இம்தியாஸ், 28; கணேஷ், 28; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ரூ. 4 ஆயிரத்து 380 ரொக்கம், இரண்டு மொபைல் போன் மற்றும் 21 வெளி மாநில லாட்டரி சீட்டுகளை கைப்பற்றினர்.