பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கூடுதல் கட்டடத்திற்கு மின் இணைப்பு எப்போது?

Added : நவ 27, 2019
Advertisement
 பள்ளி கூடுதல் கட்டடத்திற்கு மின் இணைப்பு எப்போது?

வாலாஜாபாத்:அரசு நடுநிலைப் பள்ளிக்கான கூடுதல் கட்டடத்திற்கு, மின் இணைப்பு வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

வாலாஜாபாத் ஒன்றியம், சாமந்திபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, எல்.கே.ஜி., முதல், 8ம் வகுப்பு வரை, 203 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இப்பள்ளிக்கு, நெற்களம் அருகே, அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் காஞ்சிபுரம், தி.மு.க., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு நிதியில், இரு வகுப்பறை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.இந்த கட்டடத்திற்கு, இதுவரை மின் இணைப்பு பெறாததால், மாணவ - மாணவியர் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், மழைக்காலத்தில், ஒழுகும் கட்டடத்தில் மாணவர்கள் படிக்கின்றனர்.எனவே, புதிய பள்ளி கட்டடத்திற்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X