சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை

Added : நவ 27, 2019
Advertisement

வால்பாறை : வால்பாறையில், பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றாததால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

வால்பாறை நகராட்சியில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணி படிப்படியாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக, வீடு மற்றும் கடைகளில் இருந்து வெளியாகும் குப்பையை துப்புரவு பணியாளர்கள் நேரடியாக பெற்று தரம் பிரித்து, குப்பைக்கிடங்கில் கொட்டுகின்றனர்.இந்நிலையில், வால்பாறை நகரில் கடந்த மூன்று நாட்களாக வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பைக்கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. தேங்கி கிடக்கும் குப்பைக்கழிவுகளால் குடியிருப்பு பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தோடு, கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகராட்சி சார்பில் வீடு தோறும் வெளியாகும் குப்பையை துப்புரவு பணியாளர்கள் முறையாக அள்ளுவதில்லை. இதனால், நகரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பையை தினமும் அகற்ற வேண்டும்,' என்றனர்.துாய்மை இந்தியா திட்டத்தின் பரப்புரையாளர் ரகுபதி கூறுகையில், ''வால்பாறை நகரில் மட்டும், 2,429 வீடுகள் உள்ளன. துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பையை தரம் பிரித்து பெறுவதை கண்காணிக்க இரண்டு பரப்புரையாளர், ஐந்து மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

துப்புரவு பணியாளர் பற்றாக்குறை காரணமாக, சில இடங்களில் குப்பையை உடனடியாக அகற்ற முடியவில்லை. வால்பாறை நகரில் வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பைகள் தரம் பிரித்து பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X