சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோடுகளில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது புகார்

Added : நவ 27, 2019
Advertisement

உடுமலை : உடுமலையில், ரோடுகள் ஆக்கிரமிப்பு காரணமாக கடும் நெரிசல் ஏற்படுகிறது, என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அதில், விவசாயிகள் பேசியதாவது :உடுமலை சந்தை ரோட்டின் இருபுறமும், வெங்கடகிருஷ்ணா ரோட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்படுகின்றன.பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்தும், ரோடுகளை ஆக்கிரமித்தும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு, முறைகேடாக கணக்கில் வராமல் வியாபாரிகளிடம் 'அடாவடி' வசூல் செய்யப்படுகிறது.

உரிய ரசீது தருவதில்லை; இந்த தொகை யார் கணக்கிற்கு செல்கிறது, என தெரியவில்லை. வி.ஜி.,ராவ் நகராட்சி துவக்கப்பள்ளி வளாகம் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதால், மது அருந்துதல், கஞ்சா அடித்தல் என சமூக விரோத செயல்களின் மையமாக மாறியுள்ளது. பூலாங்கிணர்- தளி மற்றும் பூலாங்கிணர் - கொங்கல்நகரம் ரோட்டின் இரு புறமும், களி மண் கொட்டப்பட்டுள்ளதால், விபத்துக்கள் அதிகரிக்கிறது.புகார் தெரிவித்தால், களி மண் போடக்கூடாது என தெரிந்தும், புகாரை மறைக்கும் வகையில் அதிகாரிகள் அலட்சியமாக பதில் தருகின்றனர்.எஸ்.வி.,புரம்- கண்ணமநாயக்கனுார் ரோடு, குறுகியதாவும், குண்டும், குழியுமாகவும் உள்ளது.

இங்குள்ள குட்டையை பலர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, வளைவை நேர் செய்ய வேண்டும். கணபதிபாளையம், பூலாங்கிணர் உள்ளிட்ட பகுதிகளில், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X