பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியின மக்களுக்கு நடமாடும் ரேஷன் கடை

Added : நவ 27, 2019
Advertisement

வால்பாறை : வால்பாறை அருகே பழங்குடியின மக்கள் வசதிக்காக நடமாடும் ரேஷன் கடை திறக்கப்பட்டது. வால்பாறை தாலுகாவில் மொத்தம், 48 ரேஷன் கடைகள் உள்ளன.

பெரும்பாலான ரேஷன்கடைகளை யானை இடித்து சேதப்படுத்துவதால் கடை தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள கீழ்பூனாஞ்சி செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க, ஏழு கி.மீ., தொலைவில் உள்ள அட்டகட்டி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு, பழங்குடியின மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

கீழ்பூனாஞ்சி செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் பழங்குடின மக்கள் வசதிக்காக, தற்போது நடமாடும் ரேஷன் கடை திறக்கப்பட்டது.புதிய ரேஷன்கடையை வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி, வால்பாறை கூட்டுறவு நகர வங்கி தலைவர் அமீது, அட்டகட்டி மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் ெஹர்பெட் ஆகியோர் துவக்கி வைத்தனர். நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டதால், கீழ்பூனாஞ்சி பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X