பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டாம் கிளை நுாலகத்தில் நிலவேம்பு கஷாயம் முகாம்

Added : நவ 27, 2019
Share
Advertisement
உடுமலை : உடுமலை, இரண்டாம் கிளைநுாலகத்தில், இன்று நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் நடக்கிறது.உடுமலை உழவர் சந்தை அருகே இரண்டாம் கிளை நுாலகம் செயல்படுகிறது. இந்நுாலகத்தில் பருவநிலை மாற்றத்தையொட்டி, பொதுமக்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம், ஞாயிறுதோறும் நடக்கிறது.தற்போது, பொதுநுாலகத்துறை, வாரத்தில் இரண்டு முறை, பொதுமக்களுக்கு

உடுமலை : உடுமலை, இரண்டாம் கிளைநுாலகத்தில், இன்று நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் நடக்கிறது.உடுமலை உழவர் சந்தை அருகே இரண்டாம் கிளை நுாலகம் செயல்படுகிறது.

இந்நுாலகத்தில் பருவநிலை மாற்றத்தையொட்டி, பொதுமக்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம், ஞாயிறுதோறும் நடக்கிறது.தற்போது, பொதுநுாலகத்துறை, வாரத்தில் இரண்டு முறை, பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும் என நுாலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, இந்த வாரம், இரண்டாவது நாளாக, இன்று காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கிளை நுாலகத்தில், அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவுடன் இணைந்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் நடக்கிறது.இனி, ஞாயிறு மற்றும் வியாழன் தோறும் இம்முகாம் நடக்கும் என நுாலகர்கள் தெரிவித்தனர். பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X