ஆரோவில் செல்லும் சாலையில் மின் விளக்கு இல்லாததால் அவதி

Added : நவ 27, 2019
Advertisement

திண்டிவனம்: மொரட்டாண்டி டோல்கேட்டில் இருந்து இடையன்சாவடி வழியாக ஆரோவில் செல்லும் சாலையில் தெரு மின் விளக்குகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.புதுச்சேரியில் இருந்து சர்வதேச நகரமான ஆரோவில் 15 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு, தினந்தோறும் நுாற்றுக்கணக்கான உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.ஆரோவில் பகுதிக்கு இ.சி.ஆர்., சாலையில் இருந்து சின்ன முதலியார்சாவடி, குயிலாப்பாளையம் வழியாகவும், புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் மொரட்டாண்டி டோல்கேட் வழியாக இடையன்சாவடி சாலையைக் கடந்தும் வர முடியும்.இவ்விரு பகுதிகளிலும், ஓரிரு கிராமங்கள் அமைந்துள்ளதால், அப்பகுதியில் மட்டும் சில மின் விளக்குகள் எரிகின்றன. ஆனால், மொரட்டாண்டி டோல்கேட்டில் இருந்து சுமார் 2 கி.மீ., துாரத்திற்கு இடையன்சாவடி வரை தெரு மின் விளக்குகள் கிடையாது.இரவு நேரங்களில் ஆரோவில் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளும், புதுச்சேரிக்கு சென்று விட்டு, மீண்டும் ஆரோவில் பகுதியில் உள்ள கெஸ்ட் அவுஸ் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் மின் விளக்குகள் இல்லாததால் இருட்டில் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.இப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி, கொலை உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மின் விளக்குகளைப் பொருத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, மொரட்டாண்டி முதல் இடையன்சாவடி வரையும், குயிலாப்பாளையத்தில் இருந்து சர்டிடூ வரையும் தெரு மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X