திண்டிவனம்: தாதாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை, எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.திண்டிவனம் அடுத்த தாதாபுரத்தில், மயிலம் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து, 3 லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், தாதாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டது. மயிலம் எம்.எல்.ஏ., மாசிலாமணி, இயந்திரத்தை, துவக்கி வைத்தார்.ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலர் ராஜாராம், நிர்வாகிகள் அமராவதி, ஆறுமுகம், அரிகிருஷ்ணன், காளி, மணி, ரங்கநாதன், குப்புசாமி, பாலு, சத்யா, அண்ணாதுரை, குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.