பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி: கண்டாச்சிபுரம் பழனிவேலு பள்ளியில் மாணவர்கள் பங்கேற்பு

Added : நவ 27, 2019
Advertisement

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் பழனிவேலு உயர்நிலைப் பள்ளியில், 'தினமலர் பட்டம்' இதழ் சார்பில் 'பதில் சொல்; அமெரிக்கா செல்' தலைப்பில் மெகா வினாடி வினா போட்டி நடந்தது.நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர்களுக்கு சிறப்பான அடித்தளம் அமைக்கும் நோக்கத்தில் 'தினமலர்' நாளிதழ் 'பட்டம்' எனும் மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது. இது தமிழில் வெளியாகும் ஒரே பதிப்பாகும்.பள்ளி மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் பள்ளிகளுக்கிடையே மாநில அளவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் மெகா வினாடி வினா போட்டியை 'தினமலர் பட்டம்' இதழ் நடத்தி வருகிறது. இந்தாண்டு கோவை அமிர்தா விஸ்வவித்யா பீடம் கல்வி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் வினாடி வினா போட்டி சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், திருக்கோவிலுார் பகுதிகளில் மாணவர்கள் நலனில் அக்கறைகொண்ட பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இறுதிப்போட்டியில் முதல் பரிசுபெறும் அணியில், 2 மாணவர்களுக்கு, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.அதையொட்டி, வினாடி வினா போட்டி 'பதில் சொல்; அமெரிக்கா செல்' தலைப்பில், கண்டாச்சிபுரம் பழனிவேலு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.போட்டியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, தகுதித் தேர்வான பொது அறிவுத் தேர்வு எழுதினர். 16 பேர் தேர்வு செய்யப்பட்டு 8 அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் 'டி' அணி மாணவர்கள் தினேஷ், கோகுல் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.பழனிவேலு உயர்நிலைப் பள்ளி தாளாளர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் சங்கீதா, பழனிவேலு ஐ.டி.ஐ., முதல்வர் சத்தியராஜ் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு, 'தினமலர்' கேடயம், மெடல் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X