பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா தலத்துக்கு செல்லும் ரோட்டில் நெரிசல்

Added : நவ 27, 2019
Advertisement

உடுமலை : சுற்றுலா தலத்துக்கு செல்லும் முக்கிய ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேரூராட்சி நிர்வாகமும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பிரசித்தி பெற்ற ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும், அமணலிங்கேஸ்வரரை தரிசிக்கவும், திருமூர்த்தி அணையின் அழகை ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

பிரசித்தி பெற்ற இப்பகுதிக்கு, உடுமலையிலிருந்து தளி வழியாகவே அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டும். மேலும், ஆனைமலை மற்றும் மேற்குப்பகுதியிலிருந்து வருபவர்களும் தளியை கடந்தே செல்ல வேண்டும். வாகன போக்குவரத்து அதிகம் இருந்தாலும், குறுகலான ரோடு காரணமாக, தளியில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக மாறி விட்டது. குறிப்பாக, அங்குள்ள மூன்று ரோடு சந்திப்பில், எதிரே வாகனங்கள் வந்தால், விலகிச்செல்ல முடியாது. இப்பிரச்னைக்கு தீர்வாக, பஸ் ஸ்டாப்பிலிருந்து பிரியும் நந்தவனம் வீதியை பேரூராட்சியினர் மேம்படுத்தி, ஒரு வழிப்பாதையாக மாற்ற திட்டமிட்டனர்.இதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

ஆனால், வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்றாத நிலையில், தளி போலீசார் ஒத்துழைப்பும் இல்லாததால், ஒரு வழிப்பாதை திட்டம் முடங்கி, தற்போது, நெரிசலில் அப்பகுதி தத்தளித்து வருகிறது. பெரிய அளவிலான ரோடு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த பேரூராட்சி நிர்வாகத்தில், போதிய நிதி ஆதாரம் இல்லாதது சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகேயுள்ள பஸ் ஸ்டாப்பில், பஸ்கள் நிற்கும் போது, பிற வாகனங்கள் அப்பகுதியை கடந்து செல்ல முடியாது.மூன்று ரோடு சந்திப்பிலிருந்து, குறிப்பிட்ட துாரம் கடப்பதற்குள், வாகன ஓட்டிகள் அனைத்து சிரமங்களையும் சந்தித்து வருகின்றனர்.

எனவே பேரூராட்சி நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்பி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்; அதே போல், ஒரு வழிப்பாதை திட்டம் குறித்து, தளி போலீசாரும், ஆலோசித்து நடவடிக்கை எடுத்தால், சுற்றுலா பயணிகள் நிம்மதியடைவார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X