பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலையில் நடைபெறும் சந்தை இடமாற்றம் செய்ய மக்கள் வலியுறுத்தல்

Added : நவ 27, 2019
Advertisement

மடத்துக்குளம் : மடத்துக்குளத்தில் நடக்கும் வாரச்சந்தையை இடமாற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மடத்துக்குளத்தில், சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சார்நிலை கருவூலம், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், பேரூராட்சி, நுழைவுவாயில்களுக்கு முன்பு உள்ள இடங்களில் சந்தைக்கடைகள் அமைக்கப்பட்டன.வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால், தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுகின்றன.

பஸ் ஸ்டாண்டு நுழைவு வாயில் தொடங்கி, போலீஸ் ஸ்டேஷன், ஆய்வாளர் மாளிகை, தாலுகா அலுவலகம் வரை ரோட்டில், கடைகள் நடக்கிறது. தள்ளுவண்டி, சாக்கில் மூட்டை கட்டி, காய்கறிகள் குவித்து வைத்து, பல வகையான வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். கடைகளுக்கு வரும், மக்கள் ரோட்டின் ஓரமுள்ள வெள்ளை கோடு வரை நிற்கின்றனர். ரோட்டின் எதிரில் பல அடிகள் ஆக்கிரமித்து, வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகிறது. இதனால் இருபுறமும், பலஅடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, 'சிங்கிள்' ரோடு போல குறுகலாகி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மிகக்குறுகலான இடத்தில் வரும் வாகனங்கள், சிறிது நிலை தடுமாறினாலும், விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.ரோட்டில் விபத்துகள் ஏற்படும் நிலையில், வாரம் தோறும் சந்தைக்கடைகள் அமைக்கப்படுகிறது. எனவே சந்தையை இடமாற்றம் செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X