சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாற்றுப்பண்ணையில் புகுந்த மலைப்பாம்பு

Added : நவ 27, 2019
Advertisement

உடுமலை : உடுமலை அருகே, தென்னை நாற்றுப்பண்ணையில் மலைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை, திருமூர்த்திநகரில் மத்திய தென்னை வளர்ச்சி வாரிய, நாற்றுப்பண்ணை உள்ளது.

இங்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு, தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், பெரிய அளவிலான மலைப்பாம்பு ஊர்ந்து வந்தது.இதனால், தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.உடுமலை வனச்சரகத்தை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் பிரகாஷ், மலரவன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று, பல மணி நேரம் போராடி, மலைப்பாம்பை பிடித்து, திருமூர்த்திமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.வனத்துறையினர் கூறுகையில்,' அருகிலுள்ள மலையிலிருந்து வந்துள்ளது; ஏழு அடி நீளத்தில், ஐந்து வயதுடையதாகும். பாம்பு பிடிக்கப்பட்டு, அடர் வனப்பகுதிக்குள் விடப்பட்டது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X