தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி பகுதியில் மானாவாரி பயிர் மகசூல் அதிகரிப்பு!...பருவமழை கை கொடுத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

Added : நவ 27, 2019
Advertisement
 கள்ளக்குறிச்சி பகுதியில் மானாவாரி பயிர் மகசூல் அதிகரிப்பு!...பருவமழை கை கொடுத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கம்பு, பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, வேர்கடலை உள்ளிட்ட மானாவாரி பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். மழை ஈரத்தைக் கொண்டு வளர்ந்து இவ்வகை பயிர்கள் பலன் தருகிறது.

பருவமழை கை கொடுத்தால் மட்டுமே இப்பயிர்கள் மூலம் ஓரளவு பலன் ஈட்டமுடியும்.இதில் உளுந்து பயிர் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. அக்டோபர் மாதம் விதைத்து டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாத துவக்கத்தில் அறுவடை செய்யப்படுகிறது. உளுந்து அறுவடை தருணத்தில் வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்ய வருகின்றனர்.இதன் காரணமாக கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், உளுந்துார்பேட்டை, தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டிகளில் ஒரே நாளில் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும்.அதேபோல் மானாவாரியில் சாகுபடி செய்யும் பருத்தி நல்ல லாபத்தை ஈட்டித் தருகிறது. விதைத்து ஐந்தாவது மாதத்தில் பலன் தருவதால் இதற்கு பராமரிப்பு செலவு அதிகமாகிறது. இருப்பினும் அதிக வருவாய் கிடைப்பதால் ஆண்டுதோறும் விவசாயிகள் மானாவாரி பருத்தி செய்து வருகின்றனர்.பருத்தி பயிரிடும் பரப்பு அதிகரித்ததால் கள்ளக்குறிச்சியில் பருத்தி கொள்முதல் செய்ய தனி மார்க்கெட் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் மானாவாரி பயிர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்த ஆண்டு பருவமழை சீராக பெய்து வருவது மானாவாரி பயிர்களுக்கு நல்ல ஊட்டத்தை கொடுத்துள்ளது.தென்மேற்கு பருவமழை துவங்கும் ஜூன் மாத இறுதியில் விதைக்கப்படும் கம்பு இந்த ஆண்டு நல்ல மகசூலை பெற்றுத் தந்து விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

அதேபோன்று மானாவாரி வேர்க்கடலையும் நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது.அதைத்தொடர்ந்து பயிரிட்ட மானாவாரி பருத்தி மற்றும் உளுந்து பயிர்கள் சமீபத்திய மழையால் செழித்து வளர்ந்துள்ளது.அடுத்த மாதம் இறுதி வரை அளவான மழை கிடைத்தால் மகசூல் அதிகரித்து கூடுதல் பயன் அடைய முடியும். கடந்த கோடையில் நிலவிய கடும் வறட்சியின் தாக்கத்தால் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இதன் சாகுபடி பரப்பு குறைந்து மாற்று பயிருக்கு விவசாயிகள் மாறியுள்ளனர். நன்செய் பயிர்கள் ஏமாற்றிய நிலையில் மானாவாரி பயிர் சாகுபடி நல்ல மகசூலை கொடுத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X