பொது செய்தி

இந்தியா

இருமுடி கட்டில் பிளாஸ்டிக் தவிர்க்கவும் சபரிமலை தந்திரி வேண்டுகோள்

Added : நவ 27, 2019
Advertisement
இருமுடி கட்டில் பிளாஸ்டிக் தவிர்க்கவும் சபரிமலை தந்திரி வேண்டுகோள்

சபரிமலை,:''பக்தர்கள், தங்கள் இருமுடி கட்டில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்,'' என, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு வேண்டுகோள்விடுத்துள்ளார்.அவர் கூறியதாவது:பம்பையில் குளித்த பின், பக்தர்கள் ஆடைகளை ஆற்றில் வீசுவதில், எந்த ஐதீகமும் இல்லை. சபரிமலை ஆசாராங்களில், இது கிடையவே கிடையாது.சிலர் செய்த தவறை பின்பற்றி, ஏராளமானோர் அந்த தவறை செய்து வருகின்றனர். இதை, பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.புண்ணிய நிதி பம்பையை, துாய்மையாக பராமரிக்க வேண்டும். அதுபோல, பக்தர்கள், தங்கள் இருமுடி கட்டில் பிளாஸ்டிக் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும்.பக்தர்கள் வீசி எறியும் பன்னீர் குப்பிகள், பிளாஸ்டிக் கவர்கள், சபரிமலையில் பெரிய சுற்றுச்சூழல் பிரச்னையைஏற்படுத்துகிறது.பிளாஸ்டிக் இல்லாத சபரிமலையை உருவாக்க, பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். கடவுள் சிந்தனையை வளர்க்கவும், வாழ்க்கை முழுவதும், நம்பிக்கையின் புனிதத்தை பாதுகாக்கவும், அய்யப்ப தரிசனம் அனைத்து பக்தர்களுக்கும் வழிவகுக்கும்.இவ்வாறு, அவர்கூறினார்.சபரிமலைக்கு பக்தர்கள் வர, மூன்று பாதைகள் உள்ளன. நிலக்கல், சாலக்கயம் வழியாக, பம்பை வரை காரில் வரலாம். வண்டிப்பெரியாறில் இருந்து, புல்மேடு வழியாக வருவது, மற்றொரு பாதை. இது, மிகவும் செங்குத்தானது.மூன்றாவது பாதை, எருமேலியில் இருந்து அழுதை, கரிமலை, வலியானவட்டம் வழியிலான பரம்பரை பாதை. எருமேலியில் மகிஷியை வதம் செய்த பின், அய்யப்பன் இவ்வழியாக சபரிமலை வந்ததாக நம்பப்படுகிறது.முந்தைய காலத்தில், மகரவிளக்கு காலத்தில், இந்தப் பாதையில் பக்தர்கள் வருவர். ஆனால், தற்போது சீசன் தொடங்கிய உடனேயே பக்தர்கள் வருகின்றனர். நவ., 17-ல் இந்த பாதை வழியாக, 145 பேர் வந்தனர். 11 நாட்களில், 1,400 பேர் வந்துள்ளனர்.கூட்டம் அதிகமாக இல்லாத நாட்களில், நள்ளிரவில் அடர்ந்த காடு வழியிலான பயணம் ஆபத்து என்பதால், காலை, 6:00 மணி முதல் பகல், 2:00 மணி வரை மட்டுமே பக்தர்கள், எருமேலியில் இருந்து அனுமதிக்கப்படுகின்றனர்.வரும் நாட்களில், இந்தப் பாதையில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யும் பணியில், தேவசம் போர்டும், கோட்டயம் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X