சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து சிக்னலில் அத்துமீறல்

Added : நவ 27, 2019
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் அரசு பஸ் டிரைவர்களின் அத்துமீறல் மற்றும் அலட்சியத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது.

பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் மூன்று கிளைகள் மூலம், 93 உள்ளூர் பஸ்கள், 95 வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் ஏழு, மலைப்பகுதி களுக்கு இயக்கப்படுகின்றன.கோவை, பழநி, திருப்பூர் என பல்வேறு கிளைகளை சேர்ந்த அரசு பஸ்களும் பொள்ளாச்சி வந்து செல்கின்றன. சில அரசு பஸ்களின் டிரைவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதில்லை. பயணிகள் மற்றும் பிற வாகன ஓட்டுனர்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதில்லை, என, புகார்கள் எழுகின்றன.

ரோட்டில் செல்லும் போது, வலது பக்கமாக பஸ்சை திருப்ப சிக்னல் கொடுப்பதில்லை. ஆனால், பொள்ளாச்சியில் பெரும்பாலான பஸ் டிரைவர்கள் இதை பின்பற்றுவதில்லை. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததால், விபத்துகள் ஏற்படுகின்றன. தட்டிக் கேட்டால், 'இது பஸ் செல்லும் வழித்தடம்; நீங்கள் தான் பார்த்து செல்ல வேண்டும்,' என அலட்சியமாக பதில் அளிக்கின்றனர்.

அதே போன்று, போக்குவரத்து சிக்னல்களில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு நெரிசல் ஏற்படுத்துவது, சிக்னலில் வெள்ளை கோட்டை தாண்டி நிறுத்தி, மற்ற வாகனங்களுக்கு இடைஞ்சல் கொடுப்பது, பஸ் ஸ்டாப்களில் ஓரமாக பஸ்சை நிறுத்தாமல், நடு ரோட்டில் நிறுத்தி போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்வது என சகல விதமான அத்துமீறல்களும் அரங்கேறுகின்றன. போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினாலும், பஸ் ஊழியர்கள் அலட்சியமாகவும், மிரட்டும் தொனியிலும் பேசுகின்றனர்.

அரசு பஸ் டிரைவர்களுக்கு தொழிற்சங்கங்களின் பின்புலம் இருப்பதால், போலீசாரும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.ஊழியர்களின் உரிமைக்காக போராடும் தொழிற்சங்கங்கள், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்யும் டிரைவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, போக்குவரத்து விதிமுறைகளை போதிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X