பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் திருவள்ளுவர் சிலை: முதல்வரிடம் மனு

Added : நவ 27, 2019
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான அனுமதி கோரி மாவட்ட தமிழ் அமைப்பினர் முதல்வரிடம் மனு அளித்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவிற்கு வருகை தந்த முதல்வர் பழனிசாமியிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட மனு:கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் தமிழ் அமைப்புகள் சார்பில் திருவள்ளுவர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான அனுமதி கோரி மாவட்ட தமிழ் அமைப்பினர் முதல்வரிடம் மனு அளித்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவிற்கு வருகை தந்த முதல்வர் பழனிசாமியிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட மனு:கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் தமிழ் அமைப்புகள் சார்பில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கிட வேண்டும். அத்துடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமையவுள்ள பெருந்திட்ட வளாகத்தின் நுழைவு வாயிலிலும் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும்.மேலும் புதிதாக கட்டப்பட உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட மைய நுாலக கட்டடத்தில் தமிழ் அமைப்புகளின் கூட்ட நிகழ்வுகளுக்காக 300 பேர் அமரக்கூடிய கூட்ட அரங்கினை கட்டித்தர வேண்டும்.அத்துடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் அமைத்ததற்கும், கீழடி அகழாய்வு மூலம் தமிழர் பெருமையை உலகிற்கு தெரியப்படுத்தியதற்கும், தகுதி வாய்ந்த தமிழ் அமைப்பு பொறுப்பாளர்களுக்கு விருது வழங்கியதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.இம்மனுவை தமிழக முதல்வரிடம் கல்லை தமிழ்ச்சங்க செயலர் மதிவாணன், செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச்சங்கத் தலைவர் சவுந்திரராஜன், காப்பாளர் செல்வநாதன் உள்ளிட்ட தமிழ் அமைப்பினர் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X