சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமராவதி சர்க்கரை ஆலை பணியாளர் சங்க தேர்தல் ஒத்தி வைப்பு

Added : நவ 27, 2019
Advertisement

மடத்துக்குளம் : மடத்துக்குளம், அமராவதி சர்க்கரைஆலை பணியாளர் கூட்டுறவு கடன் சங்க தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டும் இதே போல் நடந்தது.அமராவதி சர்க்கரை ஆலை பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில், 64 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில், 40 பேர் கடன் பெற்றுள்ளனர். கடன் தவணை தொகை பாக்கியுள்ளவர்கள், தேர்தலில் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் உரிமை இல்லை என்ற விதிமுறை இந்த சங்கத்தில் உள்ளது. இந்தநிலையில், சங்கத்திற்கு தேர்தல் நடத்த திட்டமிட்டு,நேற்று வேட்புமனு பெற அறிவிக்கப்பட்டது. ஆனால், மாலை வரை யாரும் மனுதாக்கல் செய்ய வில்லை. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது: தவணைத்தொகை சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.

ஆனால், சீராக சம்பளம் வழங்காத காரணத்தால், 40 பேர்கள் கடன் தொகை நிலுவையாக உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடத்தினால், 24 பேர்கள் மட்டும் பங்கேற்க முடியும். இது நடுநிலையாக இருக்காது.இதனால், கடனுக்கான தவணைத்தொகை கணக்கில் செலுத்திய பின்பு, அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் நிலையில், தேர்தல் நடத்த வேண்டும். இதனால் தற்போது, யாரும் விண்ணப்பிக்கவில்லை. இவ்வாறு, கூறினர்.இதனை தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் அப்துல்கபார் தேர்தலை ஒத்தி வைப்பதாக தெரிவித்தார். இந்த, அறிவிப்பு மாலை, 5:00 மணிக்கு சங்கக்கதவில் ஒட்டப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியும் இதே போல் நடந்தது, குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X