பொது செய்தி

தமிழ்நாடு

மணலுார்பேட்டையில் இ-பயிர் மருத்துவ முகாம்

Added : நவ 27, 2019
Advertisement

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை கிளை நுாலகத்தில் புகைப்பட அளவிலான பயிர் காப்பீடு திட்டம் மற்றும் இ-பயிர் மருத்துவ முகாம் நடந்தது.சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், காபி பன்னாட்டு நிறுவனம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விழுப்புரம் மாவட்ட நுாலக ஆணைக்குழு இணைந்து புகைப்பட அடிப்படையிலான தனிப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் இ-பயிர் மருத்துவ முகாம் மணலுார்பேட்டை கிளை நுாலகத்தில் நடந்தது. வாசகர் வட்டத் தலைவர் ஐயாக்கண்ணு தலைமை தாங்கினார். நுாலகர் அன்பழகன் வரவேற்றார்.எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிர் மருத்துவர் கிரிஜா தலைமையிலான குழுவினர் மணலுார்பேட்டை மற்றும் தேவரடியார்குப்பம் சுற்று வட்டார கிராமப் பகுதி விவசாயிகளிடம் பயிர் பாதிப்பு குறித்து கேட்டறிந்து அதற்கான தீர்வுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்ததுடன், அத்தகவல்கள் அடங்கிய குறுஞ்செய்தியை விவசாயிகளின் மொபைல் போனுக்கு அனுப்பி வைத்தனர்.வயல்வெளிக்கு நேரில் சென்று உழவர் டாட் காம் செயலி மூலம் தனிப்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு செலுத்தும் புதிய வகை பயிர் காப்பீடு திட்டத்தை சோதிக்கும் வகையில், மொபைல் போன் கேமரா படங்கள் மூலம் சோதித்து, பயிர் காப்பீடு வழங்க சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளதை விளக்கி, உழவர் டாட் காம் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.நுாலகர் சாந்தி, பணியாளர்கள் சுந்தரி, கோவிந்தன், பாஸ்கரன், அய்யப்பன், விக்னேஷ் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X