பொது செய்தி

தமிழ்நாடு

மின்பகிர்மான வட்டத்தில் கேங்மேன் பதவி

Added : நவ 27, 2019
Advertisement

உடுமலை : உடுமலை மின்பகிர்மான வட்டத்தில், கேங்மேன் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு வரும், டிச., 2 ம் தேதி துவங்குகிறது.

உடுமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் முகமதுமுபாரக் அறிக்கை: உடுமலை, பல்லடம், திருப்பூர் மின்பகிர்மான வட்ட பகுதிகளுக்குட்பட்ட, கேங்மேன் பதவிக்கு, 2016 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் மற்றும் உடற்தகுதி தேர்வு, பழநி ரோட்டிலுள்ள உடுமலை துணை மின் நிலைய பகுதியில், வரும் டிச., 2 ம் தேதி துவங்கி, 12 ம் தேதி வரை நடக்கிறது.இப்பதவிக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள், மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட, அனுமதிச்சீட்டு மற்றும் சரிபார்ப்பு பட்டியலில் உள்ள அனைத்து ஆவணங்களுடன், நிர்ணயிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பங்கேற்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்,(5,8, 10 வகுப்பு இதில் ஏதாவது ஒன்று) ஜாதிச்சான்றிதழ், மாற்றுத்திறனாளி, பண்பு மற்றும் நன்னடத்தை சான்றிதழ். கடைசியாக பயின்ற கல்வி நிறுவனத்திலிருந்து அதிகாரம் பெற்ற அலுவலரிடமிருந்து பெற்ற சான்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்திருந்தால், பதிவு அட்டை, அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல், அசல் ஆவணங்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வில் பங்கேற்கலாம். இவ்வாறு, அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X