விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மாணவர்களின் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு, கண்காணிப்பாளர் அறிவழகன், துணை கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்.எம்.ஓ., கதிர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் அனிதா வரவேற்றார்.கல்லுாரி டீன் குந்தவி தேவி தலைமை தாங்கி மாணவர்களின் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கல்லுாரி வளாகத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம் முண்டியம்பாக்கம் பஸ் நிலையம் வரை சென்று திரும்பியது. மாணவர்கள் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.டாக்டர் திலகவதி, சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், நிர்வாக அதிகாரி ஆனந்தஜோதி, பத்மாவதி மேலாளர் பிரபு மற்றும் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.