பொது செய்தி

தமிழ்நாடு

'108' ஆம்புலன்ஸ் ஆய்வுக்கு குழு அமைக்க அரசு உத்தரவு

Added : நவ 27, 2019
Share
Advertisement
சென்னை :அவசர உதவிகளுக்கான 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் உயிர் காக்கும் மருத்துவ சாதனங்கள் முறையாக செயல்படுகின்றதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கும்படி மருத்துவ கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசின் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதலாக இயக்கப்படுவதாகவும் பெரும் பாலனா வாகனங்களில் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள்

சென்னை :அவசர உதவிகளுக்கான 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் உயிர் காக்கும் மருத்துவ சாதனங்கள் முறையாக செயல்படுகின்றதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கும்படி மருத்துவ கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசின் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதலாக இயக்கப்படுவதாகவும் பெரும் பாலனா வாகனங்களில் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தள்ளது.
இதுவே இந்த வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்க காரணம் என 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் புகார் அளித்தனர். இதையைடுத்து அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்யும்படி தமிழக சுகாதார திட்ட இயக்குனர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அனைத்து மருத்துவ கல்லுாரி முதல்வர்கள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:குழந்தைகள் நல டாக்டர் 'தாய் அவசர சிகிச்சை' திட்டத்தின் துணை கண்காணிப்பாளர் அல்லது மயக்கவியல் நிபுணர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும். அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த ஆய்வு நடவடிக்கைக்கு தேவையான ஒத்துழைப்பை 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மாவட்ட மேலாளர்கள் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X