ஒரகடம்: படப்பை அருகே பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், 52; கூலி தொழிலாளி.ஒரகடம் அருகே, வைப்பூர் பகுதி சாலையை, நேற்று முன்தினம் நடந்து கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி, ராமலிங்கம், சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து, ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மாயமான பெண் சடலமாக மீட்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, சிறு வேடல் கிராமத்தை, 19 வயது இளம்பெண், மூன்று நாளைக்கு முன், வேலைக்கு செல்வதாக கூறி, வீட்டில் இருந்து கிளம்பினார். பின், வீடு திரும்பவில்லை.இந்நிலையில், சிறுவாக்கம் ஏரி அருகே, இறந்து நிலையில், இளம்பெண் கிடந்தார். அவ்வழியே மாடு மேய்க்க சென்றோர் தகவலால், தாலுகா போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டனர்.மரத்தில், துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம். அதற்கான தடயம் உள்ளதாக, போலீசார் கூறினர்.
டூ - விலர் திருட்டு
திருவாலங்காடு: திருத்தணி அடுத்த அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் வெங்கடேசன், 23. கடந்த, 24ம் தேதி, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் முன், தன், 'ஸ்பிளண்டர் பிளஸ்' இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, கோவிலுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, வாகனத்தை காணவில்லை. இது குறித்து, திருவாலங்காடு போலீசில் புகார் அளித்தார்.முதியவர் மாயம்வெள்ளவேடு: வெள்ளவேடு அடுத்த மேல்மணம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் கோவிந்தராஜ், 65.சரக்கு வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவர், 24ம் தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்றார்; பின், வீடு திரும்பவில்லை. இது குறித்து, அவரது மனைவி கோமதி, 50, புகாரை, வெள்ளவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபரை தாக்கியோர் மீது வழக்கு
செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை, அயத்துார் கிராமத்தைச் சேர்ந்த ரகுராமன் மகன் விக்ரம், 18, என்பவர், தன், 'ஹோண்டா' இருசக்கர வாகனத்தில், அயத்துார் குளம் அருகே சென்றார்.இவரை, அதே பகுதி அஜீத், சந்தோஷ், வல்லரசு உட்பட ஆறு பேர் வழிமறித்து, அவரது இருசக்கர வாகனத்தை கேட்டு தகராறு செய்தனர்.விக்ரம் தர மறுத்ததால், இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இது குறித்த விக்ரம் புகாரின்படி, செவ்வாப்பேட்டை போலீசார், அஜீத் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிந்தனர்.
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த, திம்மாவரம் அண்ணாநகரைச் சேர்ந்த தாஸ் மகன் சந்தோஷ் என்கிற சந்தோஷ்குமார், 34. இவர் மீது, கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், கடந்த அக்., மாதம், செங்கல்பட்டில், ஒரு வாலிபரை வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில், சந்தோஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அதன்பின், அவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி, அவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் பொன்னையா, நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்பின், புழல் சிறையில் உள்ள, சந்தோஷிடம், குண்டர் சட்ட நகலை, நேற்று, போலீசார் வழங்கினார்.