சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவெண்ணைநல்லூர் அருகே கிராம மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

Added : நவ 27, 2019
Advertisement

உளுந்துார்பேட்டை: விழுப்புரம் மாவட்டத்தோடு இணைக்கக்கோரி திருவெண்ணெய்நல்லுார் அருகே கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சியை பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு உளுந்துார்பேட்டை தாலுகா இணைக்கப்பட்டது. திருவெண்ணைநல்லுார் ஒன்றியம் தாலுகாவாக அறிவிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.இதில் திருவெண்ணநல்லுார் பகுதியில் உள்ள பெரியசெவலை, ஆமூர், ஆமூர்குப்பம், துலக்கம்பட்டு, சரவணபாக்கம், மடப்பட்டு, கருவேப்பிலைபாளையம், டி.கொளத்துார், கொத்தனுார், கோவலாபுரம், பாளையம், கொண்டசமுத்திரம், பூசாரிபாளையம், ஒட்டனந்தல், புதிய ஒட்டனந்தல் ஆகிய கிராமங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.இதனால் இந்த கிராமங்களையும் விழுப்புரம் மாவட்டத்தோடு இணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விழுப்புரம் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், சரவணபாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியசெவலை அரசு உயர்நிலைப்பள்ளி, டி. கொளத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று காலை 9:30 மணியளவில் தங்கள் பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்தோடு இணைக்க வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 9:40 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு வகுப்பிற்கு சென்றனர்.மேலும், கருவேப்பிலைபாளையம், டி. கொளத்துார் கிராமங்களில் வீடுகள் தோறும் கருப்புக்கொடியேற்றி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X