விழுப்புரம்: இருதரப்பு மோதலில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர்.வானுார் அடுத்த கொமடிப்பட்டைச் சேர்ந்தவர் பாபு, 40; எதிர்வீட்டைச் சேர்ந்தவர் ரமேஷ், 39; இவரது வீட்டின் கழிவுநீர் கடந்த 24ம் தேதி பாபு வீட்டின் வாசலில் தேங்கியது. இதை தட்டிக்கேட்ட பாபு மற்றும் அவரது மனைவி மகாலட்சுமியை, ரமேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சிவா மனைவி கஸ்துாரி, 58; கேசவன் மனைவி தனலட்சுமி, 59; கார்த்திகேயன், 35; ஆகியோர் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இருதரப்பு புகாரின்பேரில், கிளியனுார் போலீசார் 4 பேர் மீது வழக்குப் பதிந்து ரமேைஷ கைது செய்தனர்.