பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டிற்கு வராத தானிய சேமிப்பு கிடங்கு

Added : நவ 27, 2019
Share
Advertisement
அன்னுார் : அன்னுார் தாலுகாவில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தானிய சேமிப்பு கிடங்குகள்பயன்படுத்தப்படாமல் உள்ளன. அன்னுார் தாலுகாவில், 15 ஆயிரம், சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் உள்ளனர். இங்கு சோளப்பயிர், நிலக்கடலை, பயறு வகைகள், சிறு தானியம், கரும்பு மற்றும் வாழை பயிரிடப்படுகிறது.விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை
 பயன்பாட்டிற்கு வராத தானிய சேமிப்பு கிடங்கு

அன்னுார் : அன்னுார் தாலுகாவில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தானிய சேமிப்பு கிடங்குகள்பயன்படுத்தப்படாமல் உள்ளன.

அன்னுார் தாலுகாவில், 15 ஆயிரம், சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் உள்ளனர். இங்கு சோளப்பயிர், நிலக்கடலை, பயறு வகைகள், சிறு தானியம், கரும்பு மற்றும் வாழை பயிரிடப்படுகிறது.விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உலர வைக்கவும், சேமித்து வைக்கவும், ஒவ்வொரு ஊராட்சியிலும், தானிய உலர் களம் மற்றும் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. என்ன நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தில் இவை பயன்படவில்லை.

குமாரபாளையம் விவசாயிகள் கூறியதாவது: விவசாயிகள் தங்கள் விளைநிலங்களிலிருந்து விளைபொருட்களை எளிதில் கொண்டு சென்று சேமிப்பு கிடங்கில் இருப்பு வைத்து நல்ல விலை வரும் போது மார்க்கெட்டில் விற்பனை செய்யலாம்.இதற்காக உலர் களம் மற்றும் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த கிடங்குகளில் அடிப்படை வசதிகள் இல்லை. சேமிப்பு கிடங்களில் இருப்பு வைக்கும் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அப்போது தான் சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்த முடியம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அன்னுார் - சத்தி ரோட்டில், 20 லட்சம் ரூபாயில் 2013ல் காணொளி மூலம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட, அன்னுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க சேமிப்பு கிடங்கு, இன்று வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. பசூர், கரியாக்கவுண்டனுார் உட்பட பல தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் அந்த சேமிப்பு கிடங்குகள், விளைபொருட்கள் சேமிப்புக்கு பயன்படுத்தாமல், எழுத்து பணி செய்யும் வளாகமாக பயன்படுகிறது.

அதிகாரிகள், கிடங்கில் அடிப்படை வசதிகள் செய்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பல கோடி ரூபாயில் அன்னுார் தாலுகாவில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் பயன்பாட்டுக்கு வரநடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X