பெண்ணிடம் நுாதன முறையில், 47 ஆயிரம் ரூபாய் பறித்துச் சென்ற திருநங்கையரை, போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை வடபழநி, அழகிரி நகரைச் சேர்ந்தவர் பரிமளா, 27. அவர், நேற்று முன்தினம் இரவு, 100 அடி சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து வெளியே வந்தார்.அப்போது, மூன்று திருநங்கையர், அவர் வைத்திருந்த, 47 ஆயிரம் ரூபாய் அடங்கிய பையை, ஆசிர்வாதம் செய்து தருவதாக கூறி, வாங்கினர். பையை பெற்ற சிறிது நேரத்தில், அருகே நின்றிருந்த ஆட்டோவில் ஏறி, தப்பினர். பரிமளா அளித்த புகாரின் அடிப்படையில், வடபழநி போலீசார் விசாரிக்கின்றனர்.
- நமது நிருபர் -