பொது செய்தி

தமிழ்நாடு

கார்த்திகை பிறந்தும் விற்பனை மந்தம்!

Added : நவ 27, 2019
Advertisement

மேட்டுப்பாளையம் : கார்த்திகை மாதம் பிறந்தும், சந்தனை மாலை விற்பனை மந்தமாக உள்ளதால், உற்பத்தி செய்த மாலைகள் தேக்கம் அடைந்துள்ளன.

கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும்; தை, மாசி, பங்குனி மாதங்களில், முருகன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களும் மாலை அணிவதுவழக்கம்.இதனால் கடைகளில் சந்தன மாலை விற்பனை படுஜோராக இருக்கும். இதன் மூலம் மாலைகளை உற்பத்தி செய்யும் நரிக்குறவர் இனத்தவர்களுக்கு, வருவாய் கிடைத்து வருகிறது.ஆனால், எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு, சந்தன மாலை விற்பனை மந்தமாக உள்ளது.

இதனால், உற்பத்தி செய்த மாலைகள் வீடுகளிலும், கடைகளிலும் தேக்கம் அடைந்துள்ளன. காரமடையை அடுத்த எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள சந்தன மாலை தயாரிப்பவர்கள் கூறியதாவது: சந்தனம், ருத்தராட்சம், ஸ்படிகம், பூ ருத்தராட்சம், ரத்த சந்தனம், பவளம், துளிசி உள்ளிட்டவற்றால் மாலைகளை உற்பத்தி செய்கிறோம். ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள் சந்தன மாலைகள் அதிகம் வாங்குவர்.

இதனால், இந்த மாலைகளை ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்வோம். உபயோகப்படுத்திய மாலைகளை தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு வைத்துக் கொள்வதால், புதிதாக மாலைகள் வாங்குவது குறைந்துள்ளது. எனவே நாங்கள் உற்பத்திசெய்யும் மாலைகளை, காதி கதர் பவனில் வாங்கவும், எங்களுக்கு வங்கியில் மானியத்தில் தனிநபர்மற்றும் தொழில்கடன் வழங்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X