பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருந்தகத்துக்கு சுற்றுச்சுவர் அவசியம்

Added : நவ 27, 2019
Advertisement

மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகேயுள்ள கணியூர் கால்நடை மருந்தகத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கணியூரில் மாரியம்மன் கோவில் ரோடு அருகே, கால்நடை மருந்தகம் உள்ளது. சொந்த கட்டடத்தில் இயங்கும் இந்த மருந்தகத்துக்குசுற்றுச்சுவர் இல்லை. இதனால், பொதுமக்களும், கால்நடை வளர்ப்போருக்கும் சிரமம் ஏற்படுகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால், முட்புதர்களில் வசிக்கும் விஷப்பூச்சிகள் மருந்தகவளாகத்தில் 'உலா' வருகின்றன.இதனால், கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதோடு, வளாகத்தை திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர். இதைத்தடுக்க மருந்தகத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X