சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி சாவில் சந்தேகம் கணவர் போலீசில் புகார்

Added : நவ 27, 2019
Share
Advertisement
விழுப்புரம்: வளவனுார் அருகே மனைவி சாவில் சந்தேகம் இருப்பதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.வளவனுார் அடுத்த வி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் மனைவி இளவரசி, 30; திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண், 1 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இளவரசி உடல்நிலை சரியில்லாததால் கடந்த 22ம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கில் சிகிச்சை

விழுப்புரம்: வளவனுார் அருகே மனைவி சாவில் சந்தேகம் இருப்பதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.வளவனுார் அடுத்த வி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் மனைவி இளவரசி, 30; திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண், 1 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இளவரசி உடல்நிலை சரியில்லாததால் கடந்த 22ம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றுள்ளார்.அங்கு, ஊசி போட்ட இடத்தில் தொடர்ந்து வலி இருந்ததால் மீண்டும் 23ம் தேதி அதே டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். மேலும், வலி அதிகமாகியதால் கடந்த 24ம் தேதி, புதுச்சேரி மாநிலம், அரியூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், சிகிச்சை பெற்றார். நேற்று முன்தினம், புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.இதுகுறித்து அசோக்குமார், தனது மனைவி சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X