பொது செய்தி

தமிழ்நாடு

கடற்கரையில் குவியும் துணிகளால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பு

Added : நவ 27, 2019
Advertisement

சாயல்குடி : சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கடலில் நீராடி பழைய ஆடைகளை கடலில் விட்டு செல்கின்றனர். கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.

இங்கு நாள்தோறும் ஏராளமான வெளிமாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள், யாத்ரீகள்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். 1 கி.மீ., தொலைவில் தெற்கே மன்னார்வளைகுடா கடற்கரை அமைந்துள்ளது. ஐயப்ப, முருக பக்தர்கள், சுற்றுவட்டார கிராமங்களில் முளைக்கொட்டு உற்ஸவ விஷேசங்களில் பங்கேற்பதற்காக மாரியூர் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். கடற்கரையில் துணிகளை அப்படியே விட்டுச்செல்கின்றனர்.

அப்புறப்படுத்த வழியில்லாமல் காற்றில் அடித்துச்செல்லப்பட்டு, கூட்டமாக வரும் டால்பின் மீன்கள், ஆமைகள் உணவாக உட்கொள்வதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. பெண்கள் நீராடி விட்டு உடைமாற்றும் அறை, பயன்பாடு இன்றி சேதமடைந்துள்ளதால் திறந்தவெளியில் உடைமாற்றும் அவலம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X