பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஆய்வகம்: விவசாயிகள் வலியுறுத்தல்

Added : நவ 27, 2019
Advertisement

உடுமலை'பாலில் உள்ள நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய தமிழகத்தில் ஆய்வகம் அமைக்க வேண்டும்' என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பாலில் நச்சுத்தன்மை குறித்த விவாதம் முக்கிய இடம் பிடித்தது.விவசாயிகள் பேசியதாவது:தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 1.35 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆவின் மூலம் 30 லட்சம் லிட்டரும் மற்றவை தனியார் நிறுவனங்கள் மூலமும் கொள்முதல் செய்யப்படுகிறது.தமிழகத்தில் பாலில் நச்சுத்தன்மை உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எந்தப் பகுதியில் அல்லது நிறுவனங்களின் பாலில் நச்சுத்தன்மை உள்ளது என்பது குறித்து விளக்க வேண்டும்.பாலில் உள்ள நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய தமிழகத்தில் ஆய்வகம் இல்லை. மாவட்டங்களில் ஆய்வகம் அமைக்க வேண்டும். பாலில் உள்ள கலப்படம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X