பொது செய்தி

தமிழ்நாடு

சம்பா நெல் சாகுபடி பரப்பு 36 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு

Added : நவ 27, 2019
Advertisement

சென்னை :பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதால் நடப்பாண்டில் நெல் சாகுபடி பரப்பு 35.9 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.தென் மேற்கு பருவ மழை அதிகளவில் பெய்ததால் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய அணைகள் நிரம்பியுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக அதிகரித்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இதனால் சாகுபடிக்கு உகந்த சூழல் நிலவியது. இதை பயன்படுத்தி செப். மற்றும் அக். மாதங்களில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடி துவங்கியது. அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் மட்டுமின்றி நிலத்தடி நீரும் கைகொடுத்தது. அவ்வப்போது மழை பெய்து வருவதால் பாசனத் தேவை பூர்த்தியாகி உள்ளது.இதனால் உற்சாகம் அடைந்த விவசாயிகள் சாகுபடியில் கவனம் செலுத்தினர். தற்போது மாநிலம் முழுவதும் நெல் சாகுபடி பரப்பளவு 35.9 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 'டெல்டா' மாவட்டங்களில் மட்டும் 12 லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி நடந்து வருகிறது.கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் 32.4 லட்சம் ஏக்கரில் மட்டுமே நெல் சாகுபடி நடந்தது. இந்தாண்டு சாகுபடி பரப்பளவு 3.50 லட்சம் ஏக்கர் அதிகரித்து உள்ளது. இதனால் வேளாண் துறை அதிகாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X