பள்ளியில் ரத்த தான முகாம்தேசிய மாணவர் படை தினத்தையொட்டி, 'ஒவ்வொரு வீரரும் ரத்த தானம் செய்தல்' என்ற இலக்குடன் பெரியநாயக்கன்பாளையம், பிரஸ்காலனி அருகே உள்ள தம்பு பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது.முகாமை, தலைமை ஆசிரியர் ரமேஷ் துவக்கி வைத்தார். இம்முகாமில், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் ரத்ததானம் செய்தனர்.
ரத்த தானம் செய்தவர்களுக்கு பள்ளியின் நிர்வாக அலுவலர் சவுந்திரராஜ் சான்றிதழ்கள் வழங்கினார். முகாம் ஏற்பாடுகள், பள்ளியின் தாளாளர் சித்ரா சம்பத்குமார், செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.நுாலக ஆராய்ச்சிசூலுார் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி நுாலகம் சார்பில் நடந்த தேசிய கருத்தரங்கில், முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். செயலர் முகமது முபாரக் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினர் விக்னேஷ் சொர்ண மோகன் பேசுகையில், ''நுாலகம் ஓர் ஆராய்ச்சி கூடம். மேலை நாடுகளில் நுாலத்தை பயன்படுத்தி, ஆய்வு மேற்கொள்வோர் அதிகம்.
அதேபோல், நம் நாட்டிலும் நுாலகத்துக்கு சென்று பல்வேறு புத்தகங்களை படிக்கும் நிலை உருவாக வேண்டும்,'' என்றார்.காந்தி கிராம பல்கலை நுாலகர் தமிழ்செல்வன், நுாலக பயன்பாடு மற்றும் நுாலக அறிவை இளைய தலைமுறையினரிடத்தில் கொண்டு சேர்க்கும் முறைகள் குறித்து விளக்கினார். பேராசிரியர்கள் ஆறுமுகம், தீபக் உள்ளிட்டோர் பேசினர்.ஒழுக்கக்கல்வியே அவசியம்துடியலுார் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 16வது ஆண்டுவிழா நடந்தது.
பள்ளியின் தாளாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐ.ஜி., பாரி பேசுகையில், ''பள்ளிகள் வெறும் இன்ஜினியர்களையும், மருத்துவர்களையும் மட்டும் உருவாக்கும் இடங்களாக இருக்கக்கூடாது. மற்றவர்களுக்கு உதவும் குணம், ஒழுக்கம், பெரியோரை மதித்தல் போன்ற பண்புகளையும் கற்பிக்க வேண்டும்,'' என்றார்.பள்ளியில் நடந்த கலை, கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்தி தேர்வில் தேர்ச்சிஇந்தி பிரச்சார சபா சார்பில், இந்தி மொழிக்கான தேர்வு நடந்தது.
அன்னுார் சிவகாமி நர்சரி, பிரைமரி பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும், இந்த தேர்வில் பங்கேற்றனர்; அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி நிர்வாகி சான்றிதழ்கள் வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.கலையருவியில் கலக்கல்பள்ளி கல்வித்துறை சார்பில், சர்க்கார் சாமக்குளம் கல்வி மாவட்டம் அளவில், கலையருவி போட்டிகள் கதிர் பொறியியல் கல்லுாரியில் நடந்தன. இதில், கதை சொல்லும் போட்டியில், எல்லப்பாளையம், நடுநிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி மகேஸ்வரி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.
இதே பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி காயத்ரி, நகைச்சுவை பேச்சில், கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இரு மாணவியரும், அடுத்து வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.இவர்களை வட்டார கல்வி அலுவலர் ரங்கராஜ், தலைமை ஆசிரியை பவளக்கொடி ஆகியோர் பள்ளியில் பாராட்டி கவுரவித்தனர்.