தமிழ்நாடு

விழுப்புரம் நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விரைவில்! சாலை உட்பட அனைத்து பணிகளுக்கும் ரூ.50 கோடி

Added : நவ 27, 2019
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில், நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தைத் தொடர்ந்து 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளது.

இதற்கான டெண்டர்கள் விரைவில் ஆன்-லைன் மூலம் வெளியிடப்பட உள்ளது.விழுப்புரம் நகராட்சி நுாற்றாண்டு விழாவையொட்டி அமைச்சர் சண்முகம் கோரிக்கையை ஏற்று, உள்ளாட்சி துறையின் பரிந்துரையின் பேரில், முதல்வர் பழனிசாமி விழுப்புரம் நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக 50 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.இதையொட்டி, விழுப்புரம் நகராட்சியில் 59.706 கி.மீ., துார சாலைக்கு 33 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில், 151 இடங்களில், 32.949 கி.மீ., மண் சாலைகளை தார் சாலைகளாக அமைக்கும் பணிகளும், 9 இடங்களில் 1.456 கி.மீ., சிமென்ட் சாலை பணி, 128 இடங்களில் பழுதடைந்த தார் சாலைகள் 25.296 கி.மீ., சீரமைப்பு என பணிகள் நடைபெற உள்ளது.

மேலும், 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் விநியோக வாகனம் வாங்குவதற்கு 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், 2,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் விநியோக வாகனம் 2 வாங்க 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தெருவிளக்கு பராமரிப்பு செய்யும் வாகனம் ஒன்றிற்கு, 38 லட்சம் ரூபாயும், உயர்கோபுர மின்விளக்கு நான்கு வாங்குவதற்கு 34 லட்சம் ரூபாயும், எல்.இ.டி., மின்விளக்கு பிரதான சாலைக்கு 80 வாட்ஸ் கொண்ட 660 விளக்குகள் வாங்க 86 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், 60 சென்டர் மீடியன் வைப்பதற்கு 80 லட்சம் ரூபாயும், 48 வாட்ஸ் கொண்ட 497 எல்.இ.டி., மின் விளக்குகள் வாங்குவதற்கு 39 லட்சம் ரூபாயில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டி மற்றும் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்கு ஒரு கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்; புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணிக்கு 4 கோடியே 65 லட்சம் ரூபாயும்; பழைய பஸ் நிலைய மேம்பாடு செய்யும் பணிகளுக்கு ஒரு கோடியே 21 லட்சம் ரூபாயும்; பூந்தோட்டம் குளம் சீரமைப்பு பணிகளுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய பஸ் நிலைய வளாகம் மேம்பாட்டு பணிகளுக்கு 2 கோடியே 91 லட்சம் ரூபாயும்; நகர ஆரம்ப சுகாதார மையங்களில் அடிப்படை வசதி மேற்கொள்ளும் பணிகளுக்கு 50 லட்சம் ரூபாயும்; காமதேனு நகர் பூங்கா மேம்பாட்டு பணிகளுக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.விரைவில் டெண்டர்விழுப்புரம் நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, மொத்தம் 50 கோடி ரூபாய்க்கு விரைவில் ஆன் லைன் மூலம் டெண்டர் விடுவதற்கான ஏற்பாடுகள் ஜரூர் வேகத்தில் துவங்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X