சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலாற்றை காணோம்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்

Updated : நவ 28, 2019 | Added : நவ 27, 2019
Advertisement
பாலாற்றை காணோம்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்

உடுமலை : பாலாற்றில் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்து, பல ஆண்டுகளாகியும் அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக, விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வேதனை தெரிவித்தனர்.
உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கோட்டாட்சியர் இந்திரவள்ளி தலைமை வகித்தார். அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.இதில் விவசாயிகள் பேசியதாவது :மேற்கு தொடர்ச்சிமலையில் உருவாகும் காட்டாறுகள், நிலப்பகுதிக்கு வந்து, திருமூர்த்தி அணையிலிருந்து மேற்கு நோக்கி பாலாறாக ஓடி ஆழியாற்றில் கலக்கிறது. வழியோர கிராமங்கள், குளம், குட்டைகள் மற்றும் குடிநீர், விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ள ஆற்றின், இரு புறமும் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும், குளம், குட்டைகளுக்கான நீர் வழித்தடமும் பாதிக்கப்பட்டுள்ளது.815 தென்னை மரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்து, எல்லைக்கற்கள் நடப்பட்டன. ஆனால், பல ஆண்டுகளாகியும் அகற்றப்படாமல் உள்ளது.தனியார் நிலங்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. கணபதிபாளையம் நகராட்சி குப்பைக்கிடங்கில், தீ வைத்து எரிப்பதால், சுற்றுப்புற கிராமங்களில், கரும்புகை பரவி பாதிப்பு ஏற்படுகிறது.

கோழித்தீவன உற்பத்தி ஆலையில் வெளியேறும் புகையாலும் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. அமராவதி சர்க்கரை ஆலை, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த கரும்புக்கான தொகையை நிலுவை வைத்துள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில், உலர் களம் உள்ளது.வீணாக உள்ள இதில், மக்காச்சோளம் உள்ளிட்ட விளை பொருட்களை காய வைத்தால், மூட்டைக்கு, 18 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. சுற்றுப்புற விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். பி.ஏ.பி.,யில் கிளைக்கால்வாய்கள், ஜீப் டிராக்குகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

படைப்புழு தாக்குதலுக்கு அரசு வழங்கிய மருந்துகள், பெரும்பாலான விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை. உடுமலை, மடத்துக்குளத்தில், ஒரு சில அதிகாரிகள் தொகை வசூலிக்கின்றனர். விற்காத மருந்துகளையும் விவசாயிகளை வாங்க கட்டாயப்படுத்துகின்றனர்.உடுமலை நகராட்சி சந்தையில், கால்நடைச்சந்தை கூடுவதற்கான இடம் இல்லை. தனியார் மற்றும் நகராட்சியால் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டு, குப்பைக்கிடங்கால் கடும் துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

பி.ஏ.பி., உடுமலைக்கால்வாய் இரு புறமும், வழியோர கிராம ஊராட்சிகள் குப்பைக்கிடங்கு அமைத்துள்ளதோடு, குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் குப்பைகளும், கால்வாய் கரையில் குவிந்துள்ளது. தண்ணீரில், கண்ணாடி, பிளாஸ்டிக் கவர்கள் கலந்து, கடும் பாதிப்பு ஏற்படுகிறது.இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X