பொது செய்தி

தமிழ்நாடு

தாழ்வான மின்பெட்டி உயர்த்தி நடவடிக்கை

Added : நவ 27, 2019
Advertisement

செஞ்சி: செஞ்சி காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நுழைவு வாயில் அருகே ஆபத்தான நிலையில் தாழ்வாக இருந்த மின் பெட்டியை பேரூராட்சி பணியாளர்கள் உயர்த்தி கட்டினர்.செஞ்சி காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நுழைவுவாயில் அருகே மின்கம்பத்தில் மின்பெட்டி மாணவர்களுக்கு எட்டும் உயரத்தில் தாழ்வாக இருந்தது.இதனால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது என நேற்று 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதனையடுத்து, செஞ்சி பேரூராட்சி மின் விளக்கு பராமரிப்பு பிரிவு பணியாளர்கள் நேற்று காலை மின் பெட்டியை மாணவர்களின் கைகளுக்கு எட்டாதபடி உயரத்தில் பொருத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X