தமிழ்நாடு

புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க கால அட்டவணை

Added : நவ 27, 2019
Advertisement

ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் இருந்து கோவை, பாலக்காடு, மங்களூர் ஆகிய பகுதிகளுக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க கால அட்டவணை, வெளியிடப்பட்டுள்ளது.

போதிய புதிய ரயில் பெட்டிகள் இல்லாததால் புதிய ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.ராமேஸ்வரத்தில் இருந்து கோவை, பாலக்காடு, ஆகிய பகுதிகளுக்கு தினசரி இரவும்.மங்களூருக்கு வாரத்தில் திங்கள், புதன் ஆகிய தினங்களில் இரவு நேர எக்ஸ்பிரஸ்ரயில்கள் இயக்கப்படும், என தென்னக ரயில்வே அறிவித்தது. ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், பழநி, பெள்ளாச்சி வழியாக இயக்கப்படவுள்ளது. இதில்ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை, பொது, படுக்கை வசதி, குளிர் சாதன வசதியுள்ளபெட்டிகள் குறித்த விபரங்கள் தயார் செய்து, கால அட்டவணையுடன் தலைமை பயணிகள் போக்குவரத்து இயக்க மேலாளர் சார்பில் ரயில்வே கோட்டங்கள் ஒப்புதலுடன்இரு மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி ராமேஸ்வரம்-கோவை இரவு 10:30 மணிக்கும், ராமேஸ்வரம்- பாலக்காடு இரவு 7:00 மணிக்கும், ராமேஸ்வரம்- மங்களூரு இரவு 9:30 மணிக்கும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும்,அதே போல் மறு மார்க்கங்களிலும் ரயில்கள் இயக்கப்படும், என அறிவிக்கப்பட்டது.ரயில் பெட்டிகள் பற்றாக்குறை: புதிய ரயில்கள் இயக்கப்படும் போது புதிய பெட்டிகளுடன்தான் இயக்க வேண்டும், என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதிய ரயில் பெட்டிகள் பற்றாக்குறை காரணமாக புதியதாக அறிவிக்கப்பட்ட இந்த மூன்றுரயில்களுக்கும் இயக்கமுடியாத நிலை உள்ளது. பு

திய ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டாலும் மற்ற மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடக எம்.பி., க்கள்தங்கள் மாநிலத்திற்கு தேவை, என ரயில்வே நிர்வாகத்தினை அழுத்தம் கொடுத்து பெற்றுசெல்கின்றனர். தமிழகத்தில் உள்ள எம்.பி., க்கள் ரயில் நிர்வாகத்திற்கு போதுமான அழுத்தம் கொடுக்காததால் புதிய ரயில் பெட்டிகள் தமிழகத்திற்கு கிடைக்காமல் உள்ளது.உரிய அழுத்தம் கொடுத்து புதிய ரயில் பெட்டிகளை பெற்று, ரயில்களை இயக்க எம்.பி.,க்களும், ரயில்வே அதிகாரிகளும் முன் வர வேண்டும், என ரயில்வே பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X