சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்

Added : நவ 27, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே காதல் திருமணம் செய்த மகள், தீக்காயங்களுடன் இறந்தது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம், பெரியகரை பகுதியைச் சேர்ந்தவர் அருள்மொழி, 54; இவரது இளைய மகள் பிரியா, 29; சின்னசேலம் அடுத்த தகரை கிராமம் சின்னையா கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார், 43; என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தனது பெற்றோர்களின் சம்மதமின்றி காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி பிரியா தீக்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.இதுகுறித்து அவரது தந்தை அருள்மொழி கொடுத்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X