அரசியல் செய்தி

தமிழ்நாடு

இம்சை அரசன் ஸ்டாலின்: அமைச்சர் கிண்டல்

Added : நவ 27, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை, ''தமிழகத்தின் இம்சை அரசனாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளார்'' என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.சென்னையில் அவர் கூறியதாவது:மீனவர்கள் நீண்ட துாரம் சென்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வசதியாக நவீன மீன்பிடி படகுகள் வாங்க 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 32 கோடி ரூபாயில் 2200 மீன்பிடி படகுகள் வழங்கப்பட உள்ளது.உள்ளாட்சி
இம்சை அரசன் ஸ்டாலின்: அமைச்சர் கிண்டல்

சென்னை, ''தமிழகத்தின் இம்சை அரசனாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளார்'' என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.சென்னையில் அவர் கூறியதாவது:மீனவர்கள் நீண்ட துாரம் சென்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வசதியாக நவீன மீன்பிடி படகுகள் வாங்க 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 32 கோடி ரூபாயில் 2200 மீன்பிடி படகுகள் வழங்கப்பட உள்ளது.உள்ளாட்சி தேர்தலை 2016ல் நடத்த ஏற்பாடுகள் நடந்த நிலையில் தி.மு.க. நீதிமன்றம் சென்றதால் தேர்தல் தடைபட்டது. 'டிச.13க்குள் தேர்தல் அறிவிக்கப்படும்' என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கும்.தேர்தல் நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. மறைமுக தேர்தலை தி.மு.க.தான் எடுத்து வந்தது. ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக அமைதியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது அரசின் நிலை.தேர்தலை தடுத்து நிறுத்த தி.மு.க.வும் எதிர்க்கட்சிகளும் நீதிமன்றம் சென்றுள்ளன. தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்.தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் இம்சை அரசனாக உள்ளார். சமூக நீதியை குழிதோண்டி புதைத்தது தி.மு.க. தான். ஜெயலலிதா ஆட்சியில்தான் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தந்தார். அவர் வழியில் தமிழக அரசு இட ஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்துகிறது.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
28-நவ-201917:19:13 IST Report Abuse
s.rajagopalan பாம்பின் கால் பாம்பு அறியும்
Rate this:
Cancel
வால்டர் - Chennai,இந்தியா
28-நவ-201911:51:54 IST Report Abuse
வால்டர் jkhg
Rate this:
Cancel
N.DURAI - trivandrum,இந்தியா
28-நவ-201911:28:54 IST Report Abuse
N.DURAI திடீரென்று நான் சர்வாதிகாரி என்பது ...சட்டசபையில் சட்டையை கிழித்துக்கொண்டு அலைவது ...அசுரன் படத்தை பார்த்துவிட்டு பஞ்சமி நிலத்தை பற்றி பேசி முரசொலி அலுவலகத்தின் மூல பத்திர பிரச்சனையில் மாட்டுவது ...இப்படி பல இம்சைகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X