ஐந்து ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் உள்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்ய அரசு திட்டம்

Updated : நவ 29, 2019 | Added : நவ 27, 2019 | கருத்துகள் (6)
Advertisement
ஐந்து ஆண்டுகளில், 100 லட்சம் கோடி ரூபாய்,உள்கட்டமைப்பு துறையில்,முதலீடு செய்ய,அரசு, திட்டம்

புதுடில்லி:அடுத்த ஐந்து ஆண்டுகளில், உள்கட்டமைப்பு துறையில், 100 லட்சம் கோடி ரூபாய்
முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடைபெறும், 'இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சி'யில் பங்கேற்ற அமைச்சர் பியுஷ் கோயல், இது குறித்து மேலும் கூறியதாவது:நம் நாட்டில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக, 100 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்வதற்கான திட்டத்தில் அரசு இறங்கி உள்ளது.

இந்த முதலீடு, விமான நிலையங்கள், சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் ஆகியவற்றில் தற்போது இருக்கும் உள்கட்டமைப்பின் தன்மையையும், தரத்தையும் மாற்றும் வகையில் பயன்படுத்தப்படும்.இன்னும் சொல்வதென்றால், உள்கட்டமைப்பு தொடர்பான அனைத்து துறைகளும், அதாவது, விமான போக்குவரத்து, கப்பல், சாலை போக்குவரத்து, மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறைகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகப் பெரிய உந்துதலை காணப்போகின்றன.

ஐந்து ஆண்டுகளில், 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்பது சிறிய தொகை அல்ல.இந்திய ரயில்வே துறை, 12 ஆண்டுகளில், 50 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான திட்டத்தை தயாரித்து உள்ளது.மேலும், 12 ஆண்டுகளில், 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்பது, ரயில்வேயில் இதற்கு முன் கேள்விப்பட்டிராத முதலீடாகும்.ஆனாலும், அரசால் இவ்வளவு பெரிய தொகையை, இதில் முதலீடு செய்ய முடியாது. எனவே, நாங்கள் தனியாரை துணைக்கு அழைக்க வேண்டியதிருக்கும்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டு திட்டத்தின் மூலம் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.அடுத்து, ஆர்.சி.இ.பி., எனும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத் தில் இந்தியா சேருவதில்லை என, பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு, மிகவும் தைரியமான முடிவாகும். இதன் மூலம், இந்திய நிறுவனங்களின் உரிமை மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன.

இந்தியா தன் சந்தையை உலகுக்குத் திறந்து வைக்கும் ஒரு சூழ்நிலை இப்போது இல்லை. அதேசமயம், உலகின் பிற சந்தைகளை நாம் அணுகுவதற்கு, நமக்கு சமமான அணுகல் மற்றும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.இறக்குமதி வரி குறித்த தடைகள் நம் ஏற்றுமதியை தடுக்காத வகையில், பிற நாடுகளுடன் ஏற்றுமதியை தொடர வேண்டியதிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.


கிரிசில் அறிக்கை



மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில், உள்கட்டமைப்பில் தனியார் முதலீடுகள் நிறுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட காரணங்களால் 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் உள்கட்டமைப்பு செலவினங்கள் 2008 - 2012 நிதியாண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாக இருந்தது, 2013- - 2017 வரையிலான ஆண்டுகளில், 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் இல்லாவிட்டால், இன்னும் வீழ்ச்சியடையக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-நவ-201917:31:38 IST Report Abuse
Lion Drsekar முதலில் அரசியல் கலப்பில்லாத நல்ல கல்வி, மற்றும் குழைந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் கல்வி முறையை மாற்றி, நாற்றுப்பற்றும், குடும்பம் , ஜாதி மத அரசியலுக்கு அப்பாற்பட்ட புதிய சமுதாயத்தை உருவாக்கினால் மட்டுமே எல்லாமே சிறப்பாக இருக்கும், இன்றைக்கு ஒவ்வொரு நிலையிலும் தலைமை பொறுப்பில் இருப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள் தற்போதைய உண்மை நிலை என்ன என்று தெரியும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
28-நவ-201913:56:10 IST Report Abuse
J.Isaac சாலையில் தான் திருட்டை கண்டுபிடிக்க முடியாது . தனியார் வங்கியில் தானே கடன் வாங்குவார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
28-நவ-201907:34:00 IST Report Abuse
Tamilan கடந்த ஐந்தாண்டுகளில் கட்டுமானத்துறை உட்பட பல துறைகளில் திவாலானது மட்டும் ஐம்பது லச்சம் கோடி உண்மையான பணம் . இதில் பாதிக்கு மேல் கட்டமைப்பு துறை இழந்தது . இவைகளின் சந்தை இழப்பு நூறு லச்சம் கோடிகளுக்கு மேல் . இந்த லச்சணத்தில், எப்படி புதிதாக நூறு லச்சம் கோடிகள் சரியான முறையில் முதலீடு செய்வார்கள் ?. தீயதை பார்க்காதே, கேட்காதே என்று கூறிய காந்தி இன்று உயிரோடு இருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார் . இதே நேரத்தில், மற்ற நிறுவனங்கள் சம்பாதித்தது, கொள்ளையடித்தது சில லச்சம் கோடிகள். ஆனால் அவற்றின் சந்தை மதிப்பு ஐநூறு லச்சம் கோடிகளுக்கு மேல் ஏறிவிட்டது . இப்படி ஒரு வித்தை, படித்து பட்டம் பெற்றவர்களால் காட்டப்படும் பொருளாதார வித்தைகள் தேவைதானா ? அந்நியர்கள் எதோ செயகிறார்கள் என்பதற்காக இவர்கள் ஏன் காப்பியடிக்கிறார்கள் ?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X