சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பாஸ்டேக்' பெற வாகன ஓட்டிகள் ஆர்வம்

Added : நவ 28, 2019
Advertisement
 'பாஸ்டேக்' பெற வாகன ஓட்டிகள் ஆர்வம்

கருமத்தம்பட்டி : கணியூர் சுங்கச்சாவடியில், 'பாஸ்டேக்' வில்லை பெற, வாகன உரிமையாளர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கான கட்டணம், சுங்கச்சாவடிகளில் ரொக்க மாக வசூலிக்கப்படும் நடைமுறை தற்போது உள்ளது. இதனால், சுங்கச்சாவடிகளில், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.போக்குவரத்து நெரிசலும், ஊழியர்களுடன் வாக்குவாதமும் அன்றாடம் தொடர்கதையாகி வந்தது. இந்நிலையில், வரும், டிச., 1ம் முதல், நாடு முழுவதும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும், 'பாஸ் டேக்' எனும் முறையை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடைமுறைப்படுத்த உள்ளது.

இம்முறையில், வாகனங்களின் உரிமையாளர்கள், தங்களின் புகைப்படம், முகவரி, ஆதார் எண், வாகனத்தின் ஆர்.சி., புத்தகம், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை, வங்கிகள், சுங்கச்சாவடிகளில் கொடுத்து, 'பாஸ் டேக்' வில்லைகளை பெற்றுக்கொள்ளலாம்.இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், கணியூர் டோல்கேட்டில், 'பாஸ் டேக்' வில்லைகளை பெற கூட்டம் அதிகரித்துள்ளது.இதுகுறித்து, கணியூர் சுங்கச்சாவடி மேலாளர் ராஜேஷ் கூறுகையில், ''கணியூர் டோல்கேட்டை தினமும், 15 முதல், 20 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. பாஸ்டேக் வில்லைகளை பெற, தனி கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதுவரை, 50 சதவீதம் பேர் வில்லைகளை பெற்றுள்ளனர். மீதமுள்ள இரு நாட்களில், மேலும், பலர் இணைவார்கள் என, எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.சில விநாடிகள் போதும்!'பாஸ்டேக்' வில்லைகளை பெற்றவர்கள், வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டிக்கொள்ள வேண்டும். அதிலுள்ள, ஆர்.எப்.ஐ.டி., என்ற நவீன தொழில்நுட்பத்தை, சுங்கச்சாவடிகளில் உள்ள ஸ்கேனர் கருவி கண்காணித்து, நமது வங்கி கணக்கில் இருந்து கட்டணத்தை கழித்து கொள்ளும். இதன்மூலம், அதிக நேரம் காத்திருக்காமல், சில விநாடிகளில், சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடந்து செல்ல முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X