பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் ரயில்வே இடத்தில் பயன்படுத்தப்பட்ட நடைபாதை மூடல்

Added : நவ 28, 2019
Advertisement

திண்டிவனம்: திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் நடைபாதை வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு, சிமென்ட் சுவர் எழுப்பபட்டு, நிரந்தரமாக மூடப்பட்டது.திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திண்டிவனம் பகுதி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்ததால், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திண்டிவனம் ரயில் நிலையத்தையொட்டி மேம்பாலம் கட்டப்பட்டது.திண்டிவனம் நகர பகுதிக்குச் செல்பவர்கள், மேம்பாலத்தின் கீழ் உள்ள ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து சென்று வந்தனர். ரயில்வே லைனைக் கடந்து செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, ஏற்கனவே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ரயில்வே லைன் உள்ள பகுதியை ரயில்வே நிர்வாகத்தினர் சுவர் எழுப்பி அடைத்தனர்.இதற்கு பதிலாக, பொதுமக்கள் நகர பகுதிக்கு மேம்பாலத்தின் வழியாக செல்ல படிக்கட்டு அமைத்திருந்தனர். படிக்கட்டு வழியாக வயதானவர்கள் ஏற முடியவில்லை என்ற பிரச்னை எழுந்தது.இதன் காரணமாக ரயில்வே லைனையொட்டியுள்ள சுவற்றின் பகுதியை ரயில்வே விதிகளுக்கு புறம்பாக உடைத்து, பொதுமக்கள் செல்ல தற்காலிக வழி ஏற்படுத்தப்பட்டது.இதனால் பெரும்பாலான பொது மக்கள் மேம்பாலத்தின் படிக்கட்டு வழியாக செல்வதைத் தவிர்த்து, ஆபத்தை உணராமல், தினமும் ரயில்வே தண்டவாளத்தைக்கடந்து வந்தனர்.இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், ரயில்வே லைனை அத்துமீறி கடந்த ஒருவர், அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்தார்.இதுகுறித்து ரயில்வே அதிகாரியின் கவனத்திற்கு சென்றதும், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பொது மக்கள் நடைபாதை வழியாக பயன்படுத்தி வந்த இடத்தை, ரயில்வே நிர்வாகம் இரும்பு தடுப்பு போட்டு அடைத்தனர்.அதன்பிறகும் பொது மக்கள் பலர், இரும்பு கம்பியில் உள்ள இடைவெளி வழியாக உள்ளே புகுந்து, மீண்டும் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தைக் கடந்து, திண்டிவனம் நகர பகுதிக்கு சென்று வந்தனர். இதுபற்றி கடந்த சில நாட்களுக்கு முன், 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.ரயில்வே அதிகாரிகளின் கவனத்திற்கு சென்ற உடன், இரும்பிலான தடுப்பை பொது மக்கள் யாரும் நுழைய முடியாத வகையில், நிரந்தரமாக இரண்டு பக்கமும் சுவர் எழுப்பி மூடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X