சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலையில் மறியல் சத்துணவு ஊழியர்கள் கைது

Added : நவ 28, 2019
Share
Advertisement
விழுப்புரம்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வரையறுக்கபட்ட ஊதியம் வழங்கக் கோரி, மறியலில் ஈடுபட்ட 130 நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் வீமன், ராஜாராம், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர்

விழுப்புரம்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வரையறுக்கபட்ட ஊதியம் வழங்கக் கோரி, மறியலில் ஈடுபட்ட 130 நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் வீமன், ராஜாராம், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் சுந்தராம்பாள், செயற்குழு உறுப்பினர்கள் அபராஜிதன், விஜயா, மாவட்ட செயலர் தேசிங்கு, துணைத் தலைவர் சாவித்திரி கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், வரையறுக்கபட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். காலி பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.இதனைத் தொடர்ந்து பகல் 12:05 மணிக்கு, சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சங்க நிர்வாகிகள் பெண்கள் உட்பட 130 பேர் திடீரென சாலை மறியல் செய்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விழுப்புரம் தாலுகா போலீசார், அவர்களை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X