பொது செய்தி

தமிழ்நாடு

முழு கொள்ளளவில் மேட்டூர் 63 நாட்களாக நீடிப்பு

Added : நவ 28, 2019
Advertisement

மேட்டூர், :சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி; கொள்ளளவு 93.47 டி.எம்.சி.காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரமடைந்து நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை செப். 7ல் நடப்பாண்டு முதல்முறையாக நிரம்பியது. இது வரை நான்கு முறை முழுகொள்ளளவை எட்டியது.இதில் செப். 7 முதல் 21 வரை - 25 நாட்கள்; செப். 24 முதல் 29 வரை - ஐந்து நாட்கள்; அக். 23 முதல் நவ. 7 வரை - 16 நாட்கள்; நவ. 11 முதல் நேற்று வரை 17 நாட்கள் என இதுவரை 63 நாள் அணை முழு கொள்ளளவில் நீடித்துள்ளது.நேற்று அணைக்கு வினாடிக்கு 6998 கன அடி நீர் வந்தது. பாசனத்துக்கு 6000 கன அடி நீர்; கால்வாயில் 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.அணைக்கு வரும் நீர் முழுமையாக பாசனத்துக்கு திறக்கப்படுவதால் மேலும் சில நாட்களுக்கு அணை முழு கொள்ளளவில் நீடிக்க வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X