பொது செய்தி

தமிழ்நாடு

கன்டெய்னர்களால் வாகன ஓட்டிகள்,  'திக் திக்¹'

Added : நவ 28, 2019
Advertisement

திருவொற்றியூர்:எண்ணுார் விரைவு சாலையில், கன்டெய்னர் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் உயிர் பயத்தில் பயணிக்கின்றனர்.
சென்னை துறைமுகத்திற்கு, மணலி, மாதவரம், மீஞ்சூர், பொன்னேரி, மணலி புதுநகர், விச்சூர் சுற்றுவட்டாரங்களில் உள்ள, கன்டெய்னர் முனையங்களில் இருந்து, லாரிகள் மூலம் கன்டெய்னர் எடுத்துச் செல்லப்படும்.கன்டெய்னர் லாரி போக்குவரத்திற்கு, எண்ணுார் விரைவு சாலை பிரதானம். இந்த சாலையில், திருவொற்றியூர் குப்பம் அருகே, கன்டெய்னர் பெட்டிகள் சோதனை மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கும் முனையம் உள்ளது.
அதற்காக, எண்ணுார் விரைவு சாலையில், பல கி.மீ.,க்கு கன்டெய்னர் லாரிகள், தேங்கி நிற்கும். இரவு நேரங்களில், தெருவிளக்குகள் இல்லாததால், கன்டெய்னர் லாரிகள் நிற்பது தெரியாமல், இரு சக்கர வாகன ஓட்டிகள் மோதி, படுகாயம் அடைவது வாடிக்கையாகி விட்டது. சில நேரங்களில், இறப்பும் ஏற்படுகிறது. கன்டெய்னர் லாரி ஓட்டுனர்களும் முந்தி செல்ல வேண்டும் என, தாறுமாறாக லாரிகளை இயக்குவதால், உயிர் பலி ஏற்படுகிறது.போக்குவரத்து காவல் துறையினர் சுதாரித்து, நிலை மையை சரி செய்ய வேண்டும். தெரு விளக்குகளை விரைவில் எரியச் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X