சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழைய கட்டடத்தால் இடையூறு

Added : நவ 28, 2019
Advertisement

மேட்டுப்பாளையம் : சிறுமுகை அரசு மேல்நிலைப் பள்ளியின் பழைய கட்டட வகுப்பறைகளை, இரவில் சமூக விரோத செயல்களுக்கும், பொதுக்கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர்.

சிறுமுகைப்புதுாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்குள்ள பழைய கட்டடத்தில் பிளஸ் 2 வரை வகுப்புகள் நடந்தன.வகுப்புகள் பற்றாக்குறை ஏற்பட்ட போது, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, பழைய கட்டடத்திலும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை புதிய கட்டடத்திலும் வகுப்புகள் நடந்தன. புதிய கட்டடத்தில் கூடுதலாக வகுப்பறைகள் கட்டியதால், அனைத்து வகுப்புகளும் ஒரே வளாகத்துக்கு மாற்றப்பட்டன.

அதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக, பழைய கட்டடம் பயன்படுத்தாமல் உள்ளன. இரவில் சிலர், சமூக விரோத செயல்களுக்கும், மது குடிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில், மது போதையில் சிலர் சண்டை போடுவதால், பள்ளி அருகே குடியிருப்போருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.எனவே, பள்ளியில் உள்ள பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, அந்த இடத்தை விளையாட்டு மைதானமாக மாற்றும்படி, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுமுகைப்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் கேட்ட போது, 'பழைய பள்ளிக் கட்டடத்தால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, இக்கட்டடங்களை இடிக்கும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம். அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X