மழை நீரில் மிதக்கும் கோட்டை மேடு பகுதி 

Added : நவ 28, 2019
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. வடிகால்கள் ஆக்கிரமிப்பு காரணமாக மழை நீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் கோட்டைமேடு குடியிருப்பு பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஒரு பாதி ராமநாதபுரம் நகராட்சியிலும் மற்றொரு பாதி சூரங்கோட்டை ஊராட்சிப்பகுதியிலும் வருகிறது. இப்பகுதியில் மழை க்காலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கிவிடுகிறது. இப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லுாரி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் வேறு வழியின்றி தண்ணீருக்குள் பயணிக்கும் நிலை உள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக வேறு வழியின்றி இப்பகுதியில்மக்கள் வசித்து வருகின்றனர். மாலை 5:00 மணிக்கு மேல் வீடுகளை விட்டு யாரும் வெளியேறுவதில்லை.

தேங்கி கிடக்கும் மழை நீரில் விஷ ஜந்துக்கள் வர வாய்ப்புள்ளதால் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கி விடுகின்றனர். தேங்கி கிடக்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை பதம் பார்க்கிறது. இரவு முழுவதும் உறக்கம் இன்றி தவிக்கின்றனர். இப்பகுதியில் தெரு விளக்குகள் எரிவதில்லை. மாலை நேரம் ஆகிவிட்டால் கோட்டைமேடு தனி தீவுபோல மாறிவிடுகிறது. இப்பகுதிகளில் உள்ள காலிமனைகளில்முறையான பராமரிப்பு இல்லாமல் சீமைக்கருவேல முட்புதர்கள் உள்ளது. இது விஷப்பூச்சிகளின்கூடாரமாக உள்ளது. இங்கு தேங்கியிருக்கும் மழை நீர் வழிந்தோட முன்பு வாய்க்கால்கள் இருந்தது. அதிகாரிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் தற்போது துார்ந்து போனது. இப்பகுதியில் மழை பெய்தவுடன் மின் வாரியத்தின் மின் தடை செய்து விடுகின்றனர். குறைந்தபட்சம் 4:00 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. மின் தடை குறித்து மின் வாரியத்தினரை அணுகினால் அப்பகுதிக்குபணி செய்ய ஆள் இல்லை. எப்போது மின்சாரம் வரும் என்பதை கூடதெரிவிப்பதில்லை.மின் வாரியத்தினரிடம் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இது போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.,எம்.பி.க்கள் ஓட்டுக் கேட்டு வந்ததோடு சரி இப்பகுதி மக்களின் பிரச்னைகள்குறித்த கவலைப்படுவதுமில்லை, கவனிப்பாரும் இல்லாத நிலையில் தலை விதியென வாழ்ந்து வருகின்றனர்.

நகராட்சி நிர்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிர்வகமும் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.எம்.அருண்குமார் கோட்டைமேடு: எங்கள் பகுதியை நகராட்சியோடு இணைப்பதாக தெரிவித்தனர். இன்றுவரை இணைக்கப்படவில்லை. மழை நேரங்களில் தண்ணீரில் சேறும், சகதியிலும் நடந்து கடக்க வேண்டியநிலை உள்ளது. பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இருளில் இரவு நேரங்களில் தவித்து வருகிறோம்.மழை நீர் வடிகால்கள் அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்களக்கு விடிவினை ஏற்படுத்த அதிகாரிகள் முன் வர வேண்டும், என்றார்.எம்.பாலமுருகன், பெரியகருப்பன் நகர்: எங்கள் பகுதி தனித்தீவு போல் காட்சியளிக்கிறது. இரவு நேரங்களில் மழை நீரால் வெளியில் வர முடிவதில்லை. அவசர ஆத்திரத்திற்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. குழந்தைகள் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் கண்டு கொள்வதாக இல்லை.இப்பகுதியில் தெரு விளக்குகள் எரிவதில்லை. எங்கள் பகுதியில் உள்ள மழை நீரை வடிப்பதற்கு அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X