பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டாம் நிலை காவலர் பணி உடல்திறன் தேர்வு: 819 பேர் தகுதி

Added : நவ 28, 2019
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த இரண்டாம் நிலை காவலர் பணிக்கு, ஆண்களுக்கு நடந்த உடல்திறன் தேர்வில் நேற்று 819 பேர் தகுதி பெற்றனர்.தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் மூலம் எழுத்துத் தேர்வில் தேர்வாகிய, இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களான விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த 6, 7, 8 ஆகிய தேதிகளில், விழுப்புரம், காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் உடல் திறன் தேர்வு நடந்தது.இதில், 9ம் தேதிக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும், 18ம் தேதி முதல் துவங்கி தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆண்களுக்கான உடல் திறன் தேர்விற்கு, 997 பேருக்கு அழைப்பாணை விடப்பட்டிருந்தது. இதில், 8 பேர் தேர்விற்கு வரவில்லை.மீதமுள்ள 989 பேருக்கு கயிறு ஏறுதல் தேர்வு நடந்ததில், 155 பேர் தோல்வியடைந்தனர். மீதமுள்ள 834 பேருக்கும் நீளம் தாண்டுதல் நடந்தது. இதில், 11 பேர் தோல்வியடைந்து, 823 பேர் ஓட்டத்தில் பங்கேற்றனர். அதில், 4 பேர் தோல்வி அடைத்ததில், தகுதிக்கான இடத்தை 819 பேர் பிடித்தனர். தேர்வில் பங்கேற்றோரை கண்காணிக்கும் பணிகளில் எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில் ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X